இந்தியா

ஓட்டல் சாப்பாடு இனி ருசிக்காது!

ஓட்டல் சாப்பாடு இனி ருசிக்காது!

webteam

ஜி.எஸ்.டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதால் உணவகங்களில் புதுவிலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறிய ரக உணவகங்களில் 5 சதவீதம் விலை கூடியுள்ளது. குளிர்சாதன வசதியில்லாத உணவகங்களில் 10 சதவீதமும், குளிர்சாதன வசதியுள்ள உணவகங்களில் 12 சதவீத விலையும் உயர்ந்துள்ளது. 

இதேபோல், டீக்கடைகளில் டீ விலை 5 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சாப்பாடு வகைகளை போலவே, இனிப்பு வகைகளுக்கு 5 சதவீதமும், கார வகைகளுக்கு 12 சதவீதமும் சரக்கு சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அதன் விலையும் உயர்கிறது. 

உணவகங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ள விலையால் பெரிதும் பாதுக்கப்பட்டுள்ளதாக இளைஞர்கள் கூறியுள்ளனர். வேலைநிமித்தமாக சொந்த ஊரைவிட்டு சென்னையில் வசித்து வரும் பல இளைஞர்கள் உணவகங்களையே நம்பியுள்ளனர். இந்த நிலையில் உணவகங்களில் சாப்பாட்டு விலை உயர்வு தங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ‘இனி, ஓட்டல் சாப்பாடு ருசிக்குமா?’ என்று தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.