ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தை அடுத்து ஏசி, முதல் வகுப்பு ரயில் டிக்கெட் விலை அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததை அடுத்து ரயில் கட்டணங்களும் உயர்ந்துள்ளன. குளிர்சாதன வசதி கொண்ட மற்றும் முதல் வகுப்பு ரயில் பெட்டிகளில் பயணிப்பதற்கான சேவை வரி அரை சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 5 சதவிகிதமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கட்டணமும் உயர்ந்துள்ளது. எனினும் ஜூலை 1 ஆம் தேதிக்கு பின்னர் வாங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே கட்டண உயர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆம் வகுப்பு பெட்டிகளில் செல்பவர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சரக்கு ரயில்களில் கொண்டு செல்லும் பொருட்களுக்கான சேவை வரியும் அரை சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 5 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் சிமென்ட், உரம் உள்ளிட்ட பொருட்களின் விலை சிறிதளவு உயர வாய்ப்புள்ளது.