GSLV F12
GSLV F12 @isro | Twitter
இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ஜி.எஸ்.எல்.வி’ - F12 ராக்கெட்!

PT WEB

‘நேவிகேஷன்’ எனப்படும் இட தரவுகள் குறித்த தகவல்களை பெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமைதாக ஒன்றாக இருக்கும் நிலையில், இஸ்ரோ மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து நேவிகேஷன் செயற்கைகோள் தயாரிப்பில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. அதன்படி NVS-01 செயற்கைக்கோள் கண்டறியப்பட்டுள்ளது.

NVS-01 செயற்கைக்கோள் நேவிகேஷன் இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோள்களில் முதன்மையானது. இது புவிநிலைச் சுற்றுப்பாதையில் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் இந்தியா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு நிலை, வேகம், இடம் மற்றும் நேர தகவலை துல்லியமாக வழங்க முடியும் என கூறப்படுகிறது.

இந்த செயற்கைக்கோள் சுமார் 2,232 கிலோ எடையுடையது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே தங்கள் சொந்த நேவிகேஷன் அமைப்புகளைக் கொண்ட நாடுகளாக இருக்கும் நிலையில் NVS-01 செயற்கோள் மூலம் இந்தியாவும் தனித்துமான நேவிகேஷன் அமைப்பை இனி பெறும் என கூறப்படுகிறது.

மே 29 (இன்று) திங்கட்கிழமை காலை 10:42ல் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து GSLV-F12 ராக்கெட்டில் இது விண்ணில் ஏவப்பட்டது. இதன்மூலம் கடல் சார் இருப்பிடம், விவசாய நிலங்களை கண்டறிதல், பேரிடர் மேலாண்மை, மொபைல் போன்களுக்கான நேவிகேஷன் வசதி, அரசு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், மின்துறை நிறுவனங்களுக்கு தேவையான தரவுகளை பெறமுடியும் என கூறப்படுகிறது