உத்தரப் பிரதேசத்தில் குதிரை மீது ஊர்வலம் சென்ற மணமகன் கீழே விழுந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கூண்டா நகரை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு இன்று திருமணம் என நிச்சயிக்கப்பட்ட நிலையில் புது மாப்பிள்ளை ஊர்வலத்திற்காக கண்ணன் குதிரை மீது அமர்ந்து ஊர்வலம் சென்றார். ஆனால் அப்போது யாரோ வெடி வெடித்ததாக தெரிகிறது. இதனால் மிரண்ட குதிரை வேகமாக ஓட ஆரம்பித்தது. இதனால் புதுமாப்பிள்ளையான கண்ணனும் மிரட்டு போய் விட்டார். சிறிது நேரத்தில் கண்ணனையும் கீழே தள்ளி வேகமாக ஓடிய குதிரை சாலையோரம் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது.
இதனால் கிரேன் உதவியிடன் குதிரையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சில மணி நேர முயற்சிக்கு பின் குதிரை பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டது. திருமண நாளில் மாப்பிள்ளை குதிரையிலிருந்து தவறி விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.