இந்தியா

"சோதனைக்காக அனைத்து நிறுவனங்களுக்கும் 5ஜி வழங்கப்படும்"- ரவி சங்கர் பிரசாத்

jagadeesh

அனைத்து நிறுவனங்களுக்கும் சோதனை அடிப்படையில் 5ஜி அலைக்கற்றை வழங்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூவாய் நிறுவனத்திற்கு 5ஜி அலைக்கற்றை வழங்குவது குறித்து சர்ச்சை ஏற்பட்டுவந்த நிலையில் அந்நிறுவனத்திற்கும் இந்தச் சேவை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலம் 5ஜி அலைக்கற்றையை நம்பியுள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர், அதனை நடைமுறைக்கு கொண்டு வரும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

5ஜி அலைக்கற்றை தொடர்பாக புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தச்சேவையை அமல்படுத்துவதற்கு முன்பாக சீனாவின் ஹூவாய் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் சோதனை முயற்சியாக 5ஜி அலைக்கற்றையை வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.