இந்தியா

21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கே கொரோனா பாதிப்பு அதிகம் - அரசு

21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கே கொரோனா பாதிப்பு அதிகம் - அரசு

webteam

உலக அளவில் கோரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,30,089 ஆக உள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60,108 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவிலிருந்து 2, 34,023 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3072 ஆக அதிகரித்துள்ளது. 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 68 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஜனவரி 30 முதல் இன்று வரை பதிவான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2,902 பேரின் வயது விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அதன்படி அதிகபட்சமாக 41.8 சதவீதம் அதாவது 1,213 பேரில் 21 முதல் 40 வயதிற்குப்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 வயதிலிருந்து 60 வயதுக்குட்பட்டவர்கள் 33% பேர் அதாவது 951 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17% அதாவது 484 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 68 பேர் மூத்த குடிமக்கள் ஆவார்கள். அவர்களுக்குச் சர்க்கரை வியாதி, மூச்சுத் திணறல், இருதய கோளாறு உள்ளிட்ட நோய்கள் இருந்ததாக மத்திய சுகாதாரத் துறையின் இணை செயலாளர் லுவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், “நாம் இப்போது இரண்டு விஷயங்களைக் கண்காணிக்க வேண்டும். ஒன்று, 41-60 வயதுக்குட்பட்டவர்களிடமும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. யாரும் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவர்கள் அல்ல என்பதை நாம் உணர வேண்டும்” எனத் தெரிவித்தார்.