ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகளின் ஒவ்வொரு பிரச்சினை மற்றும் கோரிக்கை குறித்து விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.
"ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. டிசம்பர் 3 ம் தேதி மத்திய விவசாயத்துறை அமைச்சர் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்," என்று அவர் கூறினார்.