இந்தியா

15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு தடை?

15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு தடை?

webteam

நாடு முழுவதும் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நிறுத்தி கொள்வதற்கான சட்டத் திருத்த கருத்துருவை மத்திய அரசு முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் ஓராண்டுக்கு ஒருமுறை தகுதி சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்பதை ஆறு மாதத்துக்கு ஒருமுறையாக மாற்ற வேண்டும் என்ற கருத்துரு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, புதிதாக பெட்ரோல் அல்லது டீசல் கார் வாங்கும்போது அதை பதிவு செய்வதற்கான கட்டணம் 600 ரூபாயில் இருந்து பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்களுக்கு பதிவு கட்டணம் 20 ஆயிரமாகவும் புதுப்பித்தல் கட்டணம் 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.