இந்தியா

அரசு அலுவலகத்தில் மது அருந்திய மூவர் பணியிடை நீக்கம்

அரசு அலுவலகத்தில் மது அருந்திய மூவர் பணியிடை நீக்கம்

webteam

அலிகாரின் அரசு போக்குவரத்துறை அலுவலகத்தில் மது அருந்தி தகாத வார்த்தைகள் பேசிய மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரிலுள்ள அரசின் போக்குவரத்துறையின் அலுவலகத்தில் மூவர் பணியின் போது மது அருந்தியுள்ளனர். அத்துடன் இவர்கள் தகாத வார்த்தைகளையும் பேசியுள்ளனர். இதுதொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.

அந்த வீடியோவில் நான்கு பேர் அரசு அலுவலகத்தில் தகாத வார்த்தைகள் பேசுவது பதிவாகியுள்ளது. மேலும் அதில் ஒருவர் மதுப் பாட்டிலிருந்து மது ஊற்றுவது போல காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதனையடுத்து போக்குவரத்துறை அந்த மூவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றொருவரை அப்பணியிலிருந்து நீக்கியுள்ளது.