இந்தியா

கார்களில் நடு இருக்கைக்கும் மும்முனை சீட் பெல்ட் கட்டாயம்

கலிலுல்லா

காரின் பின் இருக்கையில் நடுவில் அமருவோருக்கும் சீட் பெல்ட் அமைக்க வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கார்களில் முதல் வரிசையில் இரண்டு இருக்கைகள் மற்றும் பின்வரிசையில் இரண்டு ஓர இருக்கைகளுக்கு மும்முனை சீட் பெல்ட் வசதி வழங்கப்படுகிறது. பின்வரிசைகளில் நடுஇருக்கைகளுக்கு விமானங்களில் இருப்பதுபோல இருமுனை சீட் பெல்ட் ஒதுக்கப்படுகிறது.

இனி, நடுஇருக்கைகளுக்கும் மும்முனை சீட்பெல்ட் அமைப்பதை வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் சராசரியாக 5 லட்சம் சாலை விபத்துகள் நடப்பதாகவும் அவற்றில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.