ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு குடிபெயரும் போது வாகனங்களுக்கு பதிவெண் மாற்றும் பிரச்னையை தவிர்ப்பதற்காக BH பெயரில் தொடங்கும் எழுத்துகளுடன் பதிவெண் தரும் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
பாரத் என்பதன் சுருக்கமாக பிஎச் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக வெவ்வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்பவர்கள் பலனடைய முடியும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மாநிலங்களுக்கு இடையே குடிபெயர்வோர் வாகன பதிவெண் மாற்றுவதற்கு பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இனி இது போன்றவர்கள் BH வரிசையில் தொடங்கும் பதிவெண்ணை ஒரே ஒரு முறை பெற்றால் எந்த மாநிலத்திலும் வாகனத்தை பயன்படுத்த முடியும்.