இந்தியா

ஆதார் தகவல்களை திருட முடியாது: ஆணையம் மறுப்பு

ஆதார் தகவல்களை திருட முடியாது: ஆணையம் மறுப்பு

webteam

ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக வந்த தகவலை ஆதார் அடையாள அட்டை ஆணையம் மறுத்துள்ளது.

ஆதார் தகவல்கள் அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வால் திருடப்படுவதாக, சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதை ஆதார் ஆணையம் மறுத்துள்ளது. 

இதுகுறித்து ஆதார் ஆணையம், ‘'பயோமெட்ரிக்' முறையில் தகவல் சேகரிக்கும் தொழில் நுட்பம் இந்தியாவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கடுமையான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொழில் நுட்பத்தில் மக்களிடம் சேகரிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன. இந்த தகவல்கள் திருடப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. இத்தகைய தகவல் உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளது.