மத்திய சுகாதார அமைச்சகம் சேகரித்த தரவுகளின்படி, மார்ச் 17 நிலவரப்படி, 84,000 பேருக்கு ஒரு தனிமை படுக்கையும், 36,000 பேருக்கு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட படுக்கையும் இருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து 11,600 இந்தியர்களுக்கு ஒரு மருத்துவர் மற்றும் 1,826 இந்தியர்களுக்கு ஒரு மருத்துவமனை படுக்கை உள்ளது என்று தரவுகள் கூறுகிறது.
இந்த தகவல்களே பிரதமர் நரேந்திர மோடியை சமூக தூரத்திற்கு முறையிடவும், ஊரடங்கு உத்தரவு கோரவும் தூண்டியிருக்கலாம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஐ.சி.எம்.ஆர்-ன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜீனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் இயக்குநர் அனுராக் அகர்வால் கூறுகையில், “நாம் கொரோனா பரவுவதில் 2வது கட்டத்தில் இருக்கிறோம், இந்த கட்டத்தில் சமூக தொலைவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 3வது கட்டம் ஊரடங்கு உத்தரவு தேவைப்படும். தரவுகளின் அடிப்படையில், ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்தால் நோய் பரவுதலைக் கட்டுக்குள் வைக்க முடியும். அரசு சரியான முறையை கடைப்பிடித்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்ட தரவுகளின் படி 11,54, 686 அலோபதி மருத்துவர்கள் உள்ளனர். அதில் 7,30,024 அரசு மருத்துவமனை படுக்கை வசதிகள் உள்ளன.