cars x page
இந்தியா

உயரும் ஓலா, ஊபர் கார் கட்டணங்கள்.. பீக் அவர் நேரங்களில் உயர்த்த அரசு அனுமதி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை, மாலை நேரங்களில் அடிப்படை சேவை கட்டணத்தை 2 மடங்கு வரை உயர்த்தி வசூலித்துக்கொள்ள ஓலா, ஊபர் போன்ற வாடகை கார் நிறுவனங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

Prakash J

இன்றைய கால மாற்றத்தில் பொது மக்கள் உடனே வெளியே செல்வதற்குப் பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தாமல், அதாவது அந்த வாகனங்களுக்காகக் காத்திருக்காமல் அவசரமாய்ச் செல்வதற்கு ரேபிடோ, ஊபர், ஓலா உள்ளிட்ட தனியார் பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களைப் பயன்படுத்திப் பயணிக்கின்றனர். இதனால் அவர்களது பயண நேரமும் சேமிக்கப்படுகிறது. தவிர, அந்த கார்களைப் பயன்படுத்தும் நிறுவனத்தினரும் லாபத்தைக் குவித்து வருகின்றனர்.

cars

இந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை, மாலை நேரங்களில் அடிப்படை சேவை கட்டணத்தை 2 மடங்கு வரை உயர்த்தி வசூலித்துக் கொள்ள ஓலா, ஊபர் போன்ற வாடகை கார் நிறுவனங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்குமுன், ஒன்றரை மடங்கு வரை மட்டுமே கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது. அதேநேரம், போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் குறைந்தபட்சமாக அடிப்படை கட்டணத்தில் இருந்து 50 சதவீத கட்டணம் வரை உயர்த்தி வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.