ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் கோவா மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவை வெளியிட்டுள்ளார். அதன்படி தற்போது ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக உள்ள சத்யபால் மாலிக் கோவா மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மிசோரம் மாநில ஆளுநராக பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் வரும் 31ஆம் தேதி முதல் யூனியன் பிரதேசங்களாக மாற உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றிற்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்தரா முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக ராதா கிருஷ்ணா மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.