இந்தியா

பஞ்சாப்பில் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அனுமதி மறுப்பு - காரணம் என்ன?

webteam

பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி மறுத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்க தொடர்ந்து முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் ஆளுநரிடம் தெரிவித்திருந்தார். இதற்கு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவசியம் இல்லை எனக்கூறி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி மறுத்துள்ளார்.

இதனால் முதலமைச்சர் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மீண்டும் சட்டப்பேரவையை கூட்ட அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றினால் ஆளுநர் அதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.