இந்தியா

“செல்போன் வாங்க +2 மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்” - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மம்தா!

“செல்போன் வாங்க +2 மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்” - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மம்தா!

EllusamyKarthik

மேற்குவங்க மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் சுமார் 9.5 லட்சம் மாணவர்களுக்கு செல்போன் மற்றும் டேப்லெட் போன் வாங்க அரசு சார்பில் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி. 

கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அரசு மற்றும் அரசாங்க உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செல் போன் மற்றும் டேப்லெட் போன் வழங்க்கப்படும் என அறிவித்தது. இருப்பினும் குறுகிய கால கட்டத்தில் செல்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் பட்ஜெட் விலைக்குள் அடங்கும் 9.5 லட்சம் சாதனங்களை வழங்க முடியாது என தெரிவித்த காரணத்தினால் மேற்குவங்க அரசு மாணவர்களின் வங்கி கணக்கில் பத்தாயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார் முதல்வர் மம்தா பேனர்ஜி. 

“அரசு சார்பில் டெண்டர் விதத்தில் 1.5 லட்சம் சாதனங்கள் மட்டுமே கிடைக்கும் என அறிந்து கொண்டோம். மத்திய அரசும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சாதனங்களை வாங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அடுத்த மூன்று வார காலத்திற்குள் இந்த தொகை மாணவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்” என சொல்லியுள்ளார் மம்தா பேனர்ஜி. 

வரும் ஜூன் மாதத்தில் அங்கு பொதுத்தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் தேர்வுக்கு முன்னதாக மூன்று மாத  காலமாவது மாணவர்கள் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி பலன் பெற வேண்டுமென்ற நோக்கில் அரசு இதை செடய்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிலர் இதனை ஆளும் திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் கணக்கு எனவும் சொல்கின்றனர்.