இந்தியா

எஸ்சி/எஸ்டி சட்டத்தை காக்க அவசர சட்டம் - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தகவல்

rajakannan

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நீர்த்துப் போகச் செய்தால், அவசர சட்டம் மூலம் அச்சட்டம் பாதுகாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

சென்னை வந்த மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நீர்த்துப் போகச் செய்யாது என்று நம்புவதாகத் தெரிவித்தார். அது நடக்காமல் போனால், அவசர சட்டம் இயற்றுவதன்மூலம் எஸ்சி/எஸ்டி சட்டத்தில் மாற்றங்கள் இல்லாமல் மத்திய அரசு பாதுகாக்கும் என்றும் பாஸ்வான் தெரிவித்தார். 

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதி கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பு சட்டம் மாற்றமின்றி தொடர்ந்திட எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.