கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகள் கொள்முதல் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து உற்பத்தி பொருளின் விலை அதிகமாக இருப்பதாக கூறி சீரம் இந்தியா, பாரத் பயோடெக் நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசியின் விலையை இரண்டு மடங்காக உயர்த்தியது.
இதனால் மாநில அரசுகள் தடுப்பூசி விலையை குறைக்க வலியுறுத்த வேண்டும் எனவும் தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து தரவேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க வேண்டும் என சீரம் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.