இந்தியா

ஊரடங்கிற்கு புதிய வழிமுறைகள்: என்ன தளர்வுகள் இடம்பெற வாய்ப்பு?

ஊரடங்கிற்கு புதிய வழிமுறைகள்: என்ன தளர்வுகள் இடம்பெற வாய்ப்பு?

webteam

மே 3 வரையிலான ஊரடங்கிற்கு புதிய வழிமுறைகள் இன்று வெளியிடப்படும் என பிரதமர் கூறியிருக்கும் நிலையில், அதில் என்ன தளர்வுகள் இடம்பெற வாய்ப்பு இருக்கலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன

நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் இந்த மே 3 வரையிலான ஊரடங்கிற்கு புதிய தளர்வுகள் கொண்ட சில வழிமுறைகள் இன்று வெளியிடப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி, என்னென்ன தளர்வுகள் இடம்பெற வாய்ப்பு இருக்கலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா கட்டுக்குள் உள்ள பகுதிகளில், விவசாயப் பணிகளை தொடர்வது மற்றும் பயிர் அறுவடைக்கு ஆட்கள் அனுமதிக்கப்படலாம் என்று தெரிகிறது. உரத் தொழிற்சாலை, சிறு குறு தொழில்களுக்கு தளர்வுகள் இருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்களை நாடு முழுவதும் அனுமதிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மருந்து மூலப்பொருள் தயாரிப்பு ஆலைகள் செயல்பட அனுமதி வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.