மத்திய அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறுவதற்கான பிற்படுத்தப்பட்டோரின் வருமான உச்சவரம்பை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு பணியில் இடஒதுக்கீடு பெற, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ஆண்டு வருமானம் 6 லட்சம் ரூபாயாக உச்சவரம்பு இப்போது உள்ளது. அதை 2 லட்சம் ரூபாய் அதிகரித்து 8 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்க, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் சம உரிமை கிடைக்க முயற்சி எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆணையம் ஒன்றை அமைக்க அரசு பரிசீலிப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.