இந்தியா

ஆதாரை இணைக்க மார்ச் 31 வரை அவகாசம்: புதிய அறிவிப்பு

ஆதாரை இணைக்க மார்ச் 31 வரை அவகாசம்: புதிய அறிவிப்பு

Rasus

ஆதார் எண்ணுடன், பான் எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் தொடர்ந்து பெற ஆதார் எண்ணை கட்டாயம் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்தக் கால அவகாசத்தை தற்போது  மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி மார்ச் 31-ஆம் தேதி வரை ஆதார் எண்ணுடன், பான் எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றை இணைக்கலாம் என அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.