இந்தியா

புதிதாக 43 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை!

webteam

தகவல் தொழில்நுட்ப சட்டவிதி 69A விதியின் அடிப்படையில், இந்தியாவில் செயல்பட்டு வந்த 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

உள்நாட்டு பாதுகாப்பு கருதியும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகமாகவும் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் எல்லையில் சீனா - இந்தியாவுக்கு இடையேயான எல்லைப் பிரச்னை நடந்துவந்த நிலையில், இந்தியாவின் மீது சீனா சைபர் தாக்குதல் தொடுத்தது. அதன் காரணமாக மத்திய அரசு சீன செயலிகளான டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட பல செயலிகளுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.