இந்தியா

“நிதியமைச்சர் அறிவிப்பில் ஏழைகளுக்கு ஒன்றும் இல்லை” - ப.சிதம்பரம்

“நிதியமைச்சர் அறிவிப்பில் ஏழைகளுக்கு ஒன்றும் இல்லை” - ப.சிதம்பரம்

webteam

ஏழைகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நிதியமைச்சர் எதையும் அறிவிக்கவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்று ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப்படும் என அறிவித்தார். அதற்கான திட்டங்களை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார். இன்று மட்டும் 3.6 லட்சம் கோடிக்கான திட்டங்கள் வெளியிடப்பட்டன. மீதமுள்ள தொகைக்கான திட்டங்கள் மேலும் சில நாட்கள் அறிவிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சகத்தின் அறிவிப்பில் பல்வேறு குறைகளை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறையச் செலவு செய்வதாகவும், கடன் வாங்க அனுமதிப்பதாகவும் தெரிவித்திருக்கிறது, ஆனால் அதைச் செய்வதற்கு விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சுய அறியாமையாலும், பயத்தினாலும் அரசு கைதாகிக் கிடப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மத்திய நிதியமைச்சர் அறிவிப்பில் எதுவும் இல்லை என்றும், கோடிக்கணக்கான ஏழைகள் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக எந்த அறிவிப்பும் இல்லை என்று குறைகூறியுள்ளார். வீதிகளில் நடந்து சென்றுகொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கும், தினக்கூலிகளுக்கும் இது மோசமான அடி எனச் சாடியுள்ளார்.

எனவே முதலில் நாம் ஏழைகள் மற்றும் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் நடந்து வீடுகளுக்குச் சென்றுகொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்துச் சிந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி வறுமையில் இருக்கும் 13 கோடி குடும்பங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.