இந்தியா

குடிக்க கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? சிவசேனா அதிரடி கேள்வி

குடிக்க கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? சிவசேனா அதிரடி கேள்வி

Rasus

ஒருவர் குடிப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்கு இவர்கள் யார் என நீதிமன்றத்திற்குக் கேள்வி எழுப்பியுள்ளார் சிவசேனா எம்பி சஞ்சய் ராத்.

நாசிக்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள மதுக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டினார். இது போன்ற விஷயங்களில் முடிவெடுக்க வேண்டியது அரசாங்கம்தானே தவிர நீதிமன்றம் அல்ல என்றும் அவர் கூறினார்.

நீதிபதிகளின் கிளப்புகளை முதலில் மூட வேண்டும். ஏனெனில் அரசு மானியத்துடன் அங்குதான் அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன என்றார். நீதிபதிகள் அனுபவிக்கின்றனர். ஆனால் பொதுமக்களின் சந்தோஷத்தைக் கெடுக்கின்றனர் என்று கூறிய சஞ்சய் ராத், ஜனநாயகத்தில் மக்களுக்கு இந்த சந்தோஷமாவது இருந்து விட்டுப் போகட்டுமே என்றார்.