இந்தியா

நவ. 29இல் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகை 

webteam

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வரும் 29 ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றிப் பெற்றார். இவர் நேற்று இலங்கை அதிபராக பதவியேற்றார். இவருக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவை நேரில் சந்தித்தார். 

இந்நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வரும் 29ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், “இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன் நல்ல சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் இருநாடுகளின் உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவருடைய புதிய தலைமையில் இருநாடுகளின் உறவுகள் மிகவும் சிறப்பான உயரத்தை தொடும். அத்துடன் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வரும் 29ஆம் தேதி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வர உள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.