இந்தியா

கூர்க்கலாந்து தனி மாநிலம் கோரி தீவிரமடையும் போராட்டம்

கூர்க்கலாந்து தனி மாநிலம் கோரி தீவிரமடையும் போராட்டம்

webteam

கூர்க்கலாந்து தனி மாநிலம் கோரி மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 

டார்ஜிலிங் உள்ளிட்ட மலைப்பகுதி மாவட்ட மக்கள், கூர்க்கா ஜனசக்தி மோர்ச்சா அமைப்பினர் தனி மாநிலம் கோரி கடந்த இரு மாதங்களாக போராடி வருகின்றனர். தற்போது கூர்க்கா ஜனசக்தி மோர்ச்சா அமைப்பின் இளைஞர், மாணவர் அணியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். வீதிகளில் ஊர்வலமாக செல்லும் அவர்கள் இசைக்கருவிகளை வாசித்தும், ஆடி பாடியும் போராட்டம் மேற்கொண்டனர். இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பின்னர் தனி மாநிலம் கோரி போராட்டம் தீவிரமடையும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.