இந்தியா

கோரக்பூர் குழந்தைகள் உயிரிழப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ப.சிதம்பரம்

rajakannan

கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சமீபத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலான உயிரிழப்பு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த துயர சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் இன்று கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கோரக்பூர் குழந்தைகளை நாடு மறந்துவிட்டது வருத்தம் அளிக்கிறது. 8 நாட்களில் 118 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு உயிரிழப்பும் அரசின் நிலையை காட்டுகிறது. கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழப்பை தேசிய பேரிடராக அறிவித்து, அங்கு மருத்துவர்களையும், மருந்துகளையும் உடனடியாக அனுப்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.