இந்தியா

‘கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் 2021 ஜூன் வரை வீட்டிலிருந்து பணியாற்றலாம்’ சுந்தர் பிச்சை 

EllusamyKarthik

கொரோனாவினால் பெரும்பாலான நிறுவனங்கள் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை (வொர்க் பிரேம் ஹோம்) செய்ய அறிவுறுத்தியிருந்தன. கூகுள் நிறுவனமும் கொரோனா பரவல் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்யும் படி பணித்திருந்தது. இருந்தாலும்  இந்த ஆண்டின் இறுதிக்குள் வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அவரவர் அலுவலகத்திற்கு திரும்ப வேண்டுமெனவும் சொல்லியிருந்தது. 

இந்நிலையில் ஊழியர்கள் வரும் 2021 ஜூன் வரை வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என தற்போது அறிவித்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.

மின்னஞ்சல் மூலம் தனது நிறுவன ஊழியர்களுக்கு அவர் தெரிவித்துள்ளது “வரும் 2021 ஜூன் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் திட்டத்தை நீட்டித்துள்ளோம். இது உலகில் உள்ள அனைத்து கூகுள் அலுவலகங்களுக்கும் பொருந்தும்” என தெரிவித்துள்ளார். 

இந்தியா உட்பட  உலகம் முழுவதும் சுமார் இரண்டு லட்சம் ஊழியர்கள் கூகுளில் பணி செய்து வருகின்றனர். இந்தியாவின் குர்கான், மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் மாதிரியான நகரங்களில் கூகுள் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. 

அதே நேரத்தில் பாதிப்பு விகிதத்தை பொறுத்து அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கியை அதிகரிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.