இந்தியா

சுந்தர் பிச்சை மீதான நம்பிக்கையை இழந்த ஊழியர்கள் ! ஆய்வில் தகவல்

சுந்தர் பிச்சை மீதான நம்பிக்கையை இழந்த ஊழியர்கள் ! ஆய்வில் தகவல்

Rasus

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை மீதான நம்பிக்கை அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடையே குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகிறது. சுந்தர் பொறுப்பேற்றப்பின் கூகுள் நிறுவனம் வளர்ச்சியடைந்துள்ளதா? சுந்தர் எத்தகைய தலைவர்? என்பது குறித்து கூகுளில் பணிப்புரியும் ஊழியர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் ஈட்டிய சாதனை தங்களுக்கு ஊக்கமளிப்பதாக 78 சதவிதம் பேர் கூறியுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 10 சதவிதம் குறைவாகும். எதிர்காலத்தில் சுந்தர் பிச்சை தலைமையில் கூகுளை முன்னெடுத்துச் செல்ல தயாரா? என்ற கேள்விக்கு 74 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர். இந்த மதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் குறைவு ஆகும்.

ஊழியர்கள் சுந்தர் பிச்சை மீதான தலைமையின் நம்பிக்கையை இழந்ததற்கு காரணம் கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்தில் எழுந்த பாலியல் புகாரும், அதற்கான சுந்தரின் நடவடிக்கைகளும்தான் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.