இந்தியா

குடியரசு தினத்தை சிறப்பிக்கும் கூகுள் டூடுள்!

குடியரசு தினத்தை சிறப்பிக்கும் கூகுள் டூடுள்!

webteam

குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுளை கூகுள் இந்தியா உருவாக்கியுள்ளது.

முக்கிய தினங்களை சிறப்பு டூடுள் மூலம் சிறப்பிப்பது கூகுளின் வழக்கம். அதன்படி நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து கூகுள் இந்தியா சிறப்பு டூடுளை உருவாக்கியுள்ளது. GOOGLE  என்ற வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தும் இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

இன்றைய கூகுளின் டூடுள் வண்ணமயமாக உருவாக்கப்பட்டுள்ளது. டூடுளின் பின்னணியில் டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையும், அருகே மரங்களும் உள்ளன. முதல் எழுத்தான G பச்சை நிறத்தில் ஆறுகளையும், நிலப்பரப்புகளையும் குறிக்கும் வகையில் உள்ளது. அடுத்துள்ள இரண்டு O எழுத்துகள் கைவினை மற்றும் இந்திய மரபினை குறிக்கும் வகையில் வண்ணமயமாக உள்ளது. அடுத்த எழுத்தான Gயில் யானை மற்றும் மயிலின் உருவம் உள்ளது. மயில் இந்தியாவின் தேசியப்பறவை. யானை இந்தியாவை பறைசாற்றும் விலங்கு என்பவை அந்த எழுத்தில் அடங்குகிறது.

அடுத்துள்ள L டெல்லியில் உள்ள குதுப்மினார் கோபுரம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிக உயரமான கோபுரமாக குதுப்மினார் அமைந்துள்ளது. கடைசி எழுத்தான E வீரர்களின் அணிவகுப்பை குறிக்கும் வகையில் வண்ணமயமாக உள்ளது. மொத்தமாக கண்ணுக்கு இதமான வண்ணங்களுடன் இந்தியாவையும் இந்திய கலாசார மரபுகளையும் குறிக்கும் விதமாக இன்றைய கூகுள் டூடுள் அமைந்துள்ளது.