இந்தியா

பலூனை பயன்படுத்தி தொலைத்தொடர்பு சேவை - கூகுள்

Rasus

பிரம்மாண்ட பலூனை பயன்படுத்தி தொலைத்தொடர்பு சேவை தரும் திட்டத்தை வணிக ரீதியில் கூகுள் தொடங்க உள்ளது.

பிரம்மாண்டமான பலூனை தொலைத்தொடர்பு கோபுரம்போல் பயன்படுத்தி செல்போன் சேவை தரும் திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு கூகுள் அறிவித்தது. இதன் படி ‘லூன்’ என்ற பெயரில் பிரம்மாண்ட பலூனை உருவாக்கி கடந்த 3 ஆண்டுகளாக பெரு, போர்டோ ரிகோ ஆகிய நாடுகளில் கூகுள் பரிசோதித்தது.

இதையடுத்து வர்த்தக ரீதியில் இந்தப் பலூன் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பறக்க வைக்கப்பட உள்ளது. இன்னும் சில வாரங்களில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டம் வர்த்தக ரீதியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் பிற நிறுவனங்களும் இது போன்ற திட்டத்தை தர திட்டமிட்டுள்ளன.

தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைக்க இயலாத தொலைதூர பிரதேசங்களில் இத்ததைய பலூன்கள் செல்போன் சேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டென்னிஸ் மைதான அளவுள்ள இந்தப் பலூன்கள் ஹீலியம் வாயுவை கொண்டு நிரப்பப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.