இந்தியா

புதிய உச்சத்தில் தங்கம் விலை - ஆபரணத் தங்கம் ரூ.24,568 ஐ தொட்டது

புதிய உச்சத்தில் தங்கம் விலை - ஆபரணத் தங்கம் ரூ.24,568 ஐ தொட்டது

rajakannan

ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை இன்று தொட்டுள்ளது. 

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 24 ரூபாய் விலை அதிகரித்து 3 ஆயிரத்து 75 ரூபாய்க்கும், ஒரு சவரன் 192 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 24 ஆயிரத்து 568 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 30 காசுகள் உயர்ந்து 42 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நாடு முழுவதும் திருமண சீசன் தொடங்கவுள்ள நிலையில் தங்கத்தின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அதன் விலை கடுமையாக அதிகரிக்க இதுவே முக்கிய காரணம் என்றும் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது தவிர சர்வதேச சந்தை சூழல்களும் தங்கத்தின் விலை உயர மற்றொரு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.