நாட்டின் தங்கம் இறக்குமதி தொடர்ந்து 5ஆவது மாதமாக 19 சதவிகிதம் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார மந்தநிலை காரணமாக திருமண சீசன் காலங்களிலும் தங்கம் இறக்குமதி குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் 56 புள்ளி 1 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், சென்ற நவம்பரில் 19 சதவிகிதம் இறக்குமதி சரிந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தேவை குறைவு, விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆபரண நகை உற்பத்தியாளர்கள் குறைந்தளவு தங்கத்தையே வாங்கியுள்ளதாலும், இறக்குமதி கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.