இந்தியா

அஸ்ஸாமிலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் !

அஸ்ஸாமிலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் !

Rasus

தமிழகத்தை தொடர்ந்து அஸ்ஸாம் மாநிலத்திலும் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்காக தாலிக்கு  தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் நேற்று 2019-20-ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்களை ஈர்க்கும் வகையில் அம்மாநில நிதிநிலை அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஏழை பெண்களுக்கு தாலிக்கு 11.6 கிராம் தங்கம், மேற்படிப்பிற்காக வாங்கப்பபட்ட கடன்களில் 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, 45 வயதிற்குள் உள்ள கைம்பெண்களுக்கு உதவித் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்திலும் அத்திட்டம் அம்மாநில அரசால் செயல்படுத்தப்பட  உள்ளது.