இந்தியா

அமெரிக்கா புறப்பட்டார் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்

அமெரிக்கா புறப்பட்டார் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்

webteam

மருத்துவப் பரிசோதனை முடிந்து கூடுதல் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்.

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் பிப்ரவரி 15 ம் தேதி மும்பையில் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கணைய நோய்கான சிகிச்சை அளிக்கப்பட்டு பிப்ரவரி 22 ம் தேதி அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதே நாளில் கோவா சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பட்ஜெட்டையும் தாக்கல் செய்து உரையும் நிகழ்த்தினார்.

பின்பு மிதமான நீர்ப்போக்குக் காரணமாக பிப்ரவரி 25 ம் தேதி கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மார்ச் 1 ம் தேதி அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக மீண்டும் மும்பைக்கும் சென்றார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் பரிசோதனைக்காக மும்பையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோகர் பாரிக்கர் மருத்துவரின் ஆலோசனைபடி தேவைப்பட்டால் கூடுதல் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல இருக்கிறார் என்று தெரிவிக்கபட்டது.

இந்நிலையில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில்,நேற்று இரவு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் மனோகர் பாரிக்கர். மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையம் வந்த அவர், அங்கிருந்தபடி அமெரிக்கா புறப்பட்டார்.