இந்தியா

5 ஆண்டுகள் தாருங்கள்... முன்னேற்றத்தைக் காட்டுகிறோம்: பிரதமர் மோடி

5 ஆண்டுகள் தாருங்கள்... முன்னேற்றத்தைக் காட்டுகிறோம்: பிரதமர் மோடி

Rasus

15 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசாங்கம் செய்யாத முன்னேற்ற திட்டங்களை வெறும் 15 மாதங்களில் பாஜக அரசு செய்யும் என மணிப்பூர் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மணிப்பூரில் முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் மார்ச் 4-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். “மணிப்பூர் அழிவுப்பாதையில் இருக்கிறது. மணிப்பூர் முதலமைச்சர் 15 ஆண்டு காலமாக இருக்கிறார். ஆனால் உங்களால் முன்னேற்றத்தை பார்க்க முடிகிறதா?” என இம்பால் கூட்டத்தில் பேசிய பிரதமர் கேள்வி எழுப்பினர்.

வரும் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்க மணிப்பூர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்த மோடி, காங்கிரஸ் கட்சிக்கு 15 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்த நீங்கள் பாஜகவுக்கு 5 ஆண்டுகள் தாருங்கள் கேட்டுக்கொண்டார். காங்கிரஸ் 15 ஆண்டுகளில் காட்டாத முன்னேற்றத்தை நாங்கள் 15 மாதங்களில் காட்டுகிறோம் எனவும் கூறினார். விவசாயிகளுக்கு தண்ணீர், குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலை மற்றும் வயதானவர்களுக்கு மருத்துவம் என பல உறுதி மொழிகளை மணிப்பூர் மக்களுக்கு மோடி அளித்தார்.

2015-ம் ஆண்டின் நாகா ஒப்பந்தம் மீது அதிகரித்து வரும் சர்ச்சைகள் குறித்து பேசிய மோடி, காங்கிரஸ் கட்சி இந்த ஒப்பந்தத்தை பற்றி பொய் பிரச்சாரங்களை பரப்பி வருவதாகவும், மணிப்பூர் மாநில மக்களின் உரிமைகளை பாதிக்கும் விதத்தில் மத்திய அரசு எதுவும் செய்யாது என உறுதியளித்தார்.