உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய பெண் மீது காவலர் ஒருவர் ரூபாய் நோட்டுகளை வீசிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கோண்டா என்ற இடத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் காவல் அதிகாரி ஒருவர் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் நிகழ்ச்சியில் நடனமாடிய பெண் ஒருவரின் மீது சரமாரியாக ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசியுள்ளார். காவலர் உடையில் அதிகாரி இத்தகைய சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்டிருப்பது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் உயர் பதவியில் இருக்கும் காவல் அதிகாரியே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.