இந்தியா

கிரீஷ் கர்னாட் உட்பட 24 பேருக்கு பாதுகாப்பு!

webteam

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து, எழுத்தாளர் கிரீஷ் கர்னாட் உள்பட 24 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், பெங்களூரில் உள்ள அவரது வீட்டு வாசலில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க, சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. 
கர்நாடகாவில் கடந்த 2015 ம் ஆண்டு எழுத்தாளர் கலபுர்கி சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து பேராசிரியர் சந்திரசேகர் பட்டீல், கே.எஸ்.பகவான் உள்பட சிலருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு இருப்பதால் கர்நாடகத்தில் உள்ள பிரபல எழுத்தாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உளவுத்துறை, அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து நடிகரும் எழுத்தாளருமான கிரீஷ் கார்னட், பரகூர் ராமசந்திரப்பா, பட்டீல் புட்டப்பா மற்றும் சன்னவீரா கனவி உள்பட 24 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.