இந்தியா

''காங்கிரஸ்-க்கு பிரதமர் பதவியில் விருப்பமில்லை என கூறவில்லை'': குலாம் நபி ஆசாத்

''காங்கிரஸ்-க்கு பிரதமர் பதவியில் விருப்பமில்லை என கூறவில்லை'': குலாம் நபி ஆசாத்

webteam

காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவியில் விருப்பமில்லை என தான் கூறவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புதிய விளக்கம் அளித்துள்ளார். 

காங்கிரசுக்கு பிரதமர் பதவியில் விருப்பமில்லை என்றோ காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவியை கோரமாட்டோம் என்றோ ஒரு போதும் கூறவில்லை என குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். 

காங்கிரஸ் இந்தியாவின் பழமையான கட்சி என்றும் மிகப் பெரிய கட்சி என்றும் கூறிய குலாம் நபி ஆசாத், மத்தியில் 5 ஆண்டுகள் ஆட்சி தடையின்றி நடத்த வேண்டும் என நினைத்தால் மிகப்பெரிய கட்சிக்கே வாய்ப்பு தரப்பட வேண்டும் என்றார். 

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைப்பதை தடுப்பதே காங்கிரசின் பிரதான நோக்கம் என்றும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் தங்களுக்கே பிரதமர் பதவி கிடைக்க வேண்டும் என பிரச்னை ஏற்படுத்த மாட்டோம் என்றும் பாட்னாவில் குலாம் நபி ஆசாத் நேற்றுமுன்தினம் கூறியிருந்தார். மாநிலக்கட்சியை சேர்ந்த ஒருவர் பிரதமராவதை ஆதரிக்க காங்கிரஸ் தயங்காது என்ற ரீதியில் இமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் அவர் பேசியிருந்தார்.