நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத்தை நியமித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிபின் ராவத் தற்போது ராணுவத் தளபதியாக உள்ளார். இவரின் பதவிகாலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து முப்படைகளுக்கும் தலைமை தளபதி பொறுப்பு உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அண்மையில் முப்படை தலைமை தளபதி பொறுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத்தை நியமித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று படைகளுக்கும் ஆலோசகராக பிபின் ராவத் இருப்பார். நாளை முதல் அவர் பதவி அதிகாரம் நாளை முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த மனோஜ் முகுந்த் நரவானே நாளை ராணுவத்தின் புதிய தளபதியாக பதவியேற்க உள்ளார். இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றவர் மனோஜ் முகுந்த் நரவானே. தற்போது ராணுவத் துணை தளபதியாக உள்ளார்.