இந்தியா

கொல்லப்பட்ட வீரர்களின் குழந்தைகளுக்கு உதவப் போகிறாராம் கம்பீர்

கொல்லப்பட்ட வீரர்களின் குழந்தைகளுக்கு உதவப் போகிறாராம் கம்பீர்

webteam

சுக்மாவில் கொல்லப்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குழந்தைகளுக்கான முழு செலவையும் தனது அறக்கட்டளை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டனான கெளதம் கம்பீர், சமீப நாட்களாக பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்பு, ராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஜிஹாதிகள் குறித்து தனது ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்தார். சுக்மாவின் அம்புஷ் பகுதியில் 25 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து, ”வீரர்களின் தியாகத்திற்கு நாம் தகுதியானவர்களா என்று சிலசமயம் தோன்றுவதாக” கருத்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ”சுக்மாவில் கொல்லப்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குழந்தைகளுக்கான முழுச் செலவையும் ஏற்கிறேன்” என தனது ட்விட்டர் தளத்தில் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முந்தைய ட்வீட்களில், ”மூவர்ணக் கொடியின் காவி நிறம் கோபத்தின் தீயையும், வெள்ளை நிறம் ஜிஹாதியின் பிணங்களை மூடும் துணி என்பதையும், பச்சை தீவிரவாத வெறுப்பு என்பதையும் இந்தியாவிற்கு எதிரானவர்கள் மறந்துவிட்டார்கள்” “ஆஸாதி வேண்டுபவர்கள் வெளியே செல்லலாம். காஷ்மீர் எங்களுடையது” என்று கருத்து தெரிவித்திருந்ததார் கம்பீர்.