'இதை விட வெட்கக்கேடான கருத்து சித்துவிடம் இருக்க முடியாது' என கடுமையாக சாடியுள்ளார் கவுதம் கம்பீர்.
பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் நேற்று முன்தினம் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா புனிதத்தலத்துக்கு வழிபாடு செய்யச் சென்றார். அப்போது நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் சார்பில் உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். குருத்வாராவில் வழிபட்ட பின் சித்து அளித்த பேட்டியில், 'பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என் பெரியண்ணன்' என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக காங்கிரசுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.