இந்தியா

வாயு கசிவு: 100 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

வாயு கசிவு: 100 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

webteam

பள்ளி அருகே நின்ற லாரியில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதால், சுமார் 100 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். டெல்லியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள துக்ளகாபாத் பகுதியில் ராணி ஜான்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து திடீரென எரிவாயு கசிந்ததால் பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, பள்ளியிலிருந்து மாணவர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து வாயுக்கசிவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.