இந்தியா

கூட்டுப் பாலியல்.. கொலை மிரட்டல்.. : குற்றவாளி பெயரை கையில் எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை

webteam

கூட்டுப்பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டலும் விடுத்த குற்றவாளியின் பெயரை தனது கையில் எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த வருடன் மூன்று கொடூரர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் அந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து புகாரை வாபஸ் பெறுமாறு கூறியுள்ளனர்.

அத்துடன் அப்பெண்ணை வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண் குற்றவாளிகளின் பெயரை தன் கையில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.