இந்தியா

உயிரிழந்த செல்ல நாய்க்கு இறுதிச் சடங்கு... எஜமானர் வெளிப்படுத்திய நேசம்

உயிரிழந்த செல்ல நாய்க்கு இறுதிச் சடங்கு... எஜமானர் வெளிப்படுத்திய நேசம்

webteam

உயிரிழந்த செல்ல நாயின் உடலுக்கு, மனிதர்களுக்கு செய்வது போன்றே அதன் எஜமானர் இறுதிச் சடங்கு செய்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் செஹோர் பகுதியைச் சேர்ந்த‌ ஒருவர் வளர்த்து வந்த செல்ல நாய் உயிரிழந்தது. தனது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே நாயை வளர்த்து வந்த அதன் எஜமானர், மனிதர்களுக்கு செய்வது போன்றே நாய்க்கும் இறுதிச் சடங்கு செய்து முடித்தார். தன்னிடம் நாய் மிகுந்த நேசத்துடன் இருந்ததாகவும், அதன் இழப்பு தன்னை மிகுந்த அளவில் கவலைக்குள்ளாக்குவதாவும் எஜமானர் வேதனையுடன் கூறியுள்ளார். இதனிடையே, நாய்க்கு மனிதர்கள் போன்றே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது அப்குதியில் வசிப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.