இந்தியா

ரத்து செய்யப்பட்ட 155 ரயில்கள்: முன்பதிவு டிக்கெட்டுகளை கேன்சல் செய்தால் முழுபணம்..!

ரத்து செய்யப்பட்ட 155 ரயில்கள்: முன்பதிவு டிக்கெட்டுகளை கேன்சல் செய்தால் முழுபணம்..!

webteam

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக ரத்து செய்யப்பட்ட 155 ரயில்களில் முன்பதிவு செய்தோர், டிக்கெட்டுகளை கேன்சல் செய்யும்போது அபராதமின்றி முழுக் கட்டணமும் திருப்பி தரப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.‌ இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர்
எண்ணிக்கை 3 ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து கொரோனா
வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக நாடு முழுவதும் பலர் ரயில் டிக்கெட்டுகளை கேன்சல் செய்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் 155 ரயில்களை ரத்து செய்து ரயில்வே துறை உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த 155 ரயில்களில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்யும்போது அபராதமின்றி முழுக் கட்டணமும் திரும்பி வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 60 ரூபாய் முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.