புத்தாண்டான இன்று முதல் ஏடிஎம்களில் நாள் ஒன்றுக்கு 4,500 ரூபாய் வரை பணம் எடுக்கலாம்.
கறுப்புப் பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் விதமாக நாடெங்கும் உள்ள பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து பணத்தை வங்கிகளில் பெறுவதற்கும், ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி நேற்று வரை நாள் ஒன்றுக்கு 2,500 ரூபாய் மட்டுமே ஏடிஎம்-களில் பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் ஏடிஎம்-களில் நாள் ஒன்றுக்கு 4,500 ரூபாய் வரை பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.