இந்தியா

#TopNews அறிகுறிகளே இல்லமால் பரவும் கொரோனா முதல் அரசுக்கு ஸ்டாலின் வைத்த கோரிக்கை வரை..!

#TopNews அறிகுறிகளே இல்லமால் பரவும் கொரோனா முதல் அரசுக்கு ஸ்டாலின் வைத்த கோரிக்கை வரை..!

webteam

தமிழகத்தில் மே3 வரை ஊரடங்கில் எந்த தளர்வுகளும் இல்லை.முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு.

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது. சமூகப்பரவல் இல்லை என்பது ரேபிட் டெஸ்ட் மூலம் தெரியவந்திருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது. புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்துகிறது உயர்நீதிமன்றம்.

மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபடுவோரை கொரோனாவில் இருந்து காக்க போர்க்கால நடவடிக்கை தேவை. தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும். மே 3ஆம் தேதிக்கு பிறகு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

மும்பையில் செய்தியாளர்கள் 53 பேருக்கு கொரோனா. அறிகுறிகளே இல்லாமல் பரவுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவல்.

உலகெங்கும் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்குகிறது. இங்கிலாந்து, இத்தாலியில் நம்பிக்கையூட்டும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.

கொரோனா குறித்து தொடக்கத்திலிருந்தே உலக நாடுகளை எச்சரித்ததாக உலக சுகாதார நிறுவனம் தகவல். தொற்று பரவல் பற்றி அமெரிக்காவிடம் எதையும் மறைக்கவில்லை என்றும் விளக்கம்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை முதன்முறையாக எதிர்மறை அளவுக்கு குறைந்தது. அமெரிக்க கச்சா எண்ணெய் 306% குறைந்து -37 டாலரை தொட்டது.