சொகுசு வாழ்க்கைக்காக, விமானத்தில் பறந்து சக பயணிகளிடம் திருடுவதை தொழிலாக கொண்டிருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி லாஜ்பத் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் கபூர். இவர், தந்தையின் செய்துவந்த ஏற்றுமதி தொழிலை மலேசியா, சிங்கப்பூ ருக்கு விரிவுபடுத்த முயன்றார் கபூர். தோல்விதான் கிடைத்தது. 2 வருடமாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்தில் வசித்து பார்த்த அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து இந்தியா திரும்பினார். அடிக்கடி விமானத்தில் பறக்கும் அவர், சொகுசாக வாழ என்ன செய்யலாம் என யோசித்தார். ஐடியா தோன்றியது.
அதாவது விமானங்களில் தன்னுடன் பயணிக்கும் சக பயணிகளி டம் திருடினால் என்ன என்பதுதான் அது. உடனடியாக செயல்படுத்தினார். விமான கேபினில் வைக்கப்படும் லக்கேஜ்களையும் தெரியாமல் திருடி வந்துள்ளார்.
இவரது இந்த திருட்டு விமானத்துக்குள் இருக்கும் கேமரா மூலம் தெரிய வந்ததை அடுத்து, ராஜேஷ் கபூரை, இண்டிகோ, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்த்தது. அதாவது அவர் தங்கள் விமானங்களில் பயணிக்க அனுமதி மறுத்தன.
இதையடுத்து தனது பெயரை சஞ்சய் குப்தா என்று மாற்றிக்கொண்டு பயணிக்கத் தொடங்கினார் கபூர். கடந்த வியாழக்கிழ மை, இதே பெயரில் காஷ்மீருக்கு சென்றார். இதுபற்றி விஸ்தாரா விமான மேலாளர், டெல்லி விமான நிலைய போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தபோது இந்த தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
இவர், ஆரம்பத்தில் ரயில்வே ஸ்டேஷன்களில் திருடி வந்ததாகவும் ஏற்கனவே பல வழக்குகள் இவர் மீது உள்ளதாகாவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.